HSN & SAC search · More free tools from Posnic

திருக்குறள்

1,330 couplets · 133 chapters · Tamil and English explanations

1,330 Kurals

  1. 1அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.
  2. 2கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.
  3. 3மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்.
  4. 4வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.
  5. 5இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
  6. 6பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
  7. 7தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது.
  8. 8அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.
  9. 9கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை.
  10. 10பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
  11. 11வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
    தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
  12. 12துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.
  13. 13விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின்று உடற்றும் பசி.
  14. 14ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்.
  15. 15கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை.
  16. 16விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண்பு அரிது.
  17. 17நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்.
  18. 18சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
  19. 19தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின்.
  20. 20நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.
  21. 21ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு.
  22. 22துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
  23. 23இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு.
  24. 24உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
  25. 25ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி.
  26. 26செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்.
  27. 27சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு.
  28. 28நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்.
  29. 29குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயும் காத்தல் அரிது.
  30. 30அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.
  31. 31சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு.
  32. 32அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு.
  33. 33ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
  34. 34மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற.
  35. 35அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்.
  36. 36அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை.
  37. 37அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
  38. 38வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல்.
  39. 39அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
    புறத்த புகழும் இல.
  40. 40செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி.
  41. 41இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை.
  42. 42துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை.
  43. 43தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
  44. 44பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
  45. 45அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.
  46. 46அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ தெவன்?
  47. 47இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை.
  48. 48ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து.
  49. 49அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
  50. 50வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.
  51. 51மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
  52. 52மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்.
  53. 53இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை?
  54. 54பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்.
  55. 55தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை.
  56. 56தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
  57. 57சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை.
  58. 58பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு.
  59. 59புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை.
  60. 60மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு.
  61. 61பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற.
  62. 62எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.
  63. 63தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தம்தம் வினையான் வரும்.
  64. 64அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்.
  65. 65மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
  66. 66குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.
  67. 67தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.
  68. 68தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
  69. 69ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.
  70. 70மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல் எனும் சொல்.
  71. 71அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.
  72. 72அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு.
  73. 73அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போடு இயைந்த தொடர்பு.
  74. 74அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
  75. 75அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு.
  76. 76அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை.
  77. 77என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்.
  78. 78அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று.
  79. 79புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
    அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
  80. 80அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு.
  81. 81இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.
  82. 82விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.
  83. 83வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று.
  84. 84அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்.
  85. 85வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்.
  86. 86செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்வருந்து வானத் தவர்க்கு.
  87. 87இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன்.
  88. 88பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்.
  89. 89உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு.
  90. 90மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குநழ்யும் விருந்து.
  91. 91இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
  92. 92அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்.
  93. 93முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம்.
  94. 94துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
    இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
  95. 95பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற.
  96. 96அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்
  97. 97நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல்.
  98. 98சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும்.
  99. 99இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது?
  100. 100இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
  101. 101செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது.
  102. 102காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.
  103. 103பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
    நன்மை கடலின் பெரிது.
  104. 104தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்.
  105. 105உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து.
  106. 106மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
    துன்பத்துள் துப்பாயார் நட்பு.
  107. 107எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமந் துடைத்தவர் நட்பு.
  108. 108நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று.
  109. 109கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
  110. 110எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
  111. 111தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
    பாற்பட்டு ஒழுகப் பெறின்.
  112. 112செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
  113. 113நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல்.
  114. 114தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப்ப படும்.
  115. 115கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி.
  116. 116கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
    நடுவொரீஇ அல்ல செயின்.
  117. 117கெடுவாக வையாது உலகம் நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
  118. 118சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
    கோடாமை சான்றோர்க் கணி.
  119. 119சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உட்கோட்டம் இன்மை பெறின்.
  120. 120வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
    பிறவும் தமபோல் செயின்.
  121. 121அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்.
  122. 122காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
  123. 123செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
    ஆற்றின் அடங்கப் பெறின்.
  124. 124நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது.
  125. 125எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.
  126. 126ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து.
  127. 127யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
  128. 128ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றாகா தாகி விடும்.
  129. 129தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு.
  130. 130கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
  131. 131ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.
  132. 132பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை.
  133. 133ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.
  134. 134மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
  135. 135அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு.
  136. 136ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து.
  137. 137ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.
  138. 138நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்.
  139. 139ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்.
  140. 140உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்
  141. 141பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
    அறம்பொருள் கண்டார்கண் இல்.
  142. 142அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரின் பேதையார் இல்.
  143. 143விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்து ஒழுகு வார்.
  144. 144எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்.
  145. 145எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி.
  146. 146பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்.
  147. 147அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
    பெண்மை நயவா தவன்.
  148. 148பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
  149. 149நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
    பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
  150. 150அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
    பெண்மை நயவாமை நன்று.
  151. 151அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
  152. 152பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று.
  153. 153இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை.
  154. 154நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
    போற்றி யொழுகப் படும்.
  155. 155ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
  156. 156ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்.
  157. 157திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று.
  158. 158மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
    தகுதியான் வென்று விடல்.
  159. 159துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
  160. 160உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
  161. 161ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
    அழுக்காறு இலாத இயல்பு.
  162. 162விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்.
  163. 163அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
    பேணாது அழுக்கறுப் பான்.
  164. 164அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
    ஏதம் படுபாக்கு அறிந்து.
  165. 165அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
    வழுக்காயும் கேடீன் பது.
  166. 166கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்.
  167. 167அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
  168. 168அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்.
  169. 169அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்.
  170. 170அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
    பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
  171. 171நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
    குற்றமும் ஆங்கே தரும்.
  172. 172படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
    நடுவன்மை நாணு பவர்.
  173. 173சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
    மற்றின்பம் வேண்டு பவர்.
  174. 174இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
    புன்மையில் காட்சி யவர்.
  175. 175அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
    வெஃகி வெறிய செயின்.
  176. 176அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
    பொல்லாத சூழக் கெடும்.
  177. 177வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
    மாண்டற் கரிதாம் பயன்.
  178. 178அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
    வேண்டும் பிறன்கைப் பொருள்.
  179. 179அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
    திறன்அறிந் தாங்கே திரு.
  180. 180இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
    வேண்டாமை என்னுஞ் செருக்கு.
  181. 181அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறான் என்றல் இனிது.
  182. 182அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
    புறனழீஇப் பொய்த்து நகை.
  183. 183புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
    அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
  184. 184கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
    முன்னின்று பின்நோக்காச் சொல்.
  185. 185அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும்.
  186. 186பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
    திறன்தெரிந்து கூறப் படும்.
  187. 187பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர்.
  188. 188துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
    என்னைகொல் ஏதிலார் மாட்டு.
  189. 189அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
    புன்சொல் உரைப்பான் பொறை.
  190. 190ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
  191. 191பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும்.
  192. 192பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
    நட்டார்கண் செய்தலிற் றீது.
  193. 193நயனிலன் என்பது சொல்லும் பயனில
    பாரித் துரைக்கும் உரை.
  194. 194நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
    பண்பில்சொல் பல்லா ரகத்து.
  195. 195சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை யுடையார் சொலின்.
  196. 196பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
    மக்கட் பதடி யெனல்.
  197. 197நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று.
  198. 198அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
    பெரும்பயன் இல்லாத சொல்.
  199. 199பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
    மாசறு காட்சி யவர்.
  200. 200சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்.
  201. 201தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
    தீவினை என்னும் செருக்கு.
  202. 202தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்.
  203. 203அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்கும் செய்யா விடல்.
  204. 204மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
  205. 205இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
    இலனாகும் மற்றும் பெயர்த்து.
  206. 206தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
    தன்னை அடல்வேண்டா தான்.
  207. 207எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
    வீயாது பின்சென்று அடும்.
  208. 208தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயாது அஇஉறைந் தற்று.
  209. 209தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
    துன்னற்க தீவினைப் பால்.
  210. 210அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
    தீவினை செய்யான் எனின்.
  211. 211கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
    என் ஆற்றுங் கொல்லோ உலகு.
  212. 212தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு.
  213. 213புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
    ஒப்புரவின் நல்ல பிற.
  214. 214ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்.
  215. 215ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு.
  216. 216பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின்.
  217. 217மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின்.
  218. 218இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
    கடனறி காட்சி யவர்.
  219. 219நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
    செய்யாது அமைகலா வாறு.
  220. 220ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
    விற்றுக்கோள் தக்க துடைத்து.
  221. 221வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து.
  222. 222நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று.
  223. 223இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையான் கண்ணே யுள.
  224. 224இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணும் அளவு.
  225. 225ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்.
  226. 226அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
    பெற்றான் பொருள்வைப் புழி.
  227. 227பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது.
  228. 228ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
    வைத்திழக்கும் வன்க ணவர்.
  229. 229இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல்.
  230. 230சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
    ஈதல் இயையாக் கடை.
  231. 231ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு.
  232. 232உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ்.
  233. 233ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதொன் றில்.
  234. 234நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
    போற்றாது புத்தேள் உலகு.
  235. 235நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
    வித்தகர்க் கல்லால் அரிது.
  236. 236தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.
  237. 237புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
    இகழ்வாரை நோவது எவன்?
  238. 238வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
    எச்சம் பெறாஅ விடின்.
  239. 239வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
    யாக்கை பொறுத்த நிலம்.
  240. 240வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
    வாழ்வாரே வாழா தவர்.
  241. 241அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
    பூரியார் கண்ணும் உள.
  242. 242நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
    தேரினும் அஃதே துணை.
  243. 243அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்.
  244. 244மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
    தன்னுயிர் அஞ்சும் வினை.
  245. 245அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
    மல்லன்மா ஞாலங் கரி.
  246. 246பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
    அல்லவை செய்தொழுகு வார்.
  247. 247அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
  248. 248பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
    அற்றார்மற் றாதல் அரிது.
  249. 249தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம்.
  250. 250வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
    மெலியார்மேல் செல்லு மிடத்து.
  251. 251தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்?
  252. 252பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
  253. 253படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
    உடல்சுவை உண்டார் மனம்.
  254. 254அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
    பொருளல்லது அவ்வூன் தினல்.
  255. 255உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
    அண்ணாத்தல் செய்யாது அளறு.
  256. 256தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
    விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
  257. 257உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
    புண்ணது உணர்வார்ப் பெறின்.
  258. 258செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
    உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
  259. 259அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று.
  260. 260கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
    எல்லா உயிருந் தொழும்.
  261. 261உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு.
  262. 262தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
    அஃதிலார் மேற்கொள் வது.
  263. 263துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்.
  264. 264ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
    எண்ணின் தவத்தான் வரும்.
  265. 265வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்.
  266. 266தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
    அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
  267. 267சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
    சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
  268. 268தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
    மன்னுயி ரெல்லாந் தொழும்.
  269. 269கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
  270. 270இலர்பல ராகிய காரணம் நோற்பார்
    சிலர்பலர் நோலா தவர்.
  271. 271வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
    ஐந்தும் அகத்தே நகும்.
  272. 272வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
    தான்அறி குற்றப் படின்.
  273. 273வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
    புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
  274. 274தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
  275. 275பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
    ஏதம் பலவுந் தரும்.
  276. 276நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
    வாழ்வாரின் வன்கணார் இல்.
  277. 277புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
    முக்கிற் கரியார் உடைத்து.
  278. 278மனத்தது மாசாக மாண்டார் நீராடி
    மறைந்தொழுகு மாந்தர் பலர்.
  279. 279கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
    வினைபடு பாலால் கொளல்.
  280. 280மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்.
  281. 281எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
    கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
  282. 282உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்.
  283. 283களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
    ஆவது போலக் கெடும்.
  284. 284களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
    வீயா விழுமம் தரும்.
  285. 285அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
    பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
  286. 286அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
    கன்றிய காத லவர்.
  287. 287களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
    ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
  288. 288அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
    களவறிந்தார் நெஞ்சில் கரவு.
  289. 289அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
    மற்றைய தேற்றா தவர்.
  290. 290கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
    தள்ளாது புத்தே ளுளகு.
  291. 291வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.
  292. 292பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.
  293. 293தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
  294. 294உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்.
  295. 295மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
    தானஞ்செய் வாரின் தலை.
  296. 296பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
    எல்லா அறமுந் தரும்.
  297. 297பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று.
  298. 298புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
    வாய்மையால் காணப் படும்.
  299. 299எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு.
  300. 300யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற.
  301. 301செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கின்என் காவாக்கால் என்?
  302. 302செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
    இல்அதனின் தீய பிற.
  303. 303மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
    பிறத்தல் அதனான் வரும்.
  304. 304நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
    பகையும் உளவோ பிற.
  305. 305தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம்.
  306. 306சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்.
  307. 307சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
  308. 308இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று.
  309. 309உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி எனின்.
  310. 310இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை.
  311. 311சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.
  312. 312கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.
  313. 313செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
    உய்யா விழுமந் தரும்.
  314. 314இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்.
  315. 315அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போல் போற்றாக் கடை.
  316. 316இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
    வேண்டும் பிறன்கண் செயல்.
  317. 317எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை.
  318. 318தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
    மன்னுயிர்க்கு இன்னா செயல்.
  319. 319பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
    பிற்பகல் தாமே வரும்.
  320. 320நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
    நோயின்மை வேண்டு பவர்.
  321. 321அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
    பிறவினை எல்லாந் தரும்.
  322. 322பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
  323. 323ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று.
  324. 324நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    கொல்லாமை சூழும் நெறி.
  325. 325நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
    கொல்லாமை சூழ்வான் தலை.
  326. 326கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லாது உயிருண்ணுங் கூற்று.
  327. 327தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை.
  328. 328நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கங் கடை.
  329. 329கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
    புன்மை தெரிவா ரகத்து.
  330. 330உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
    செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
  331. 331நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மை கடை.
  332. 332கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
    போக்கும் அதுவிளிந் தற்று.
  333. 333அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
    அற்குப ஆங்கே செயல்.
  334. 334நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
    வாளது உணர்வார்ப் பெறின்.
  335. 335நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
    மேற்சென்று செய்யப் படும்
  336. 336நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு.
  337. 337ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
    கோடியும் அல்ல பல.
  338. 338குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
    உடம்பொடு உயிரிடை நட்பு.
  339. 339உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு.
  340. 340புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சில் இருந்த உயிர்க்கு.
  341. 341யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.
  342. 342வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டுஇயற் பால பல.
  343. 343அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
    வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
  344. 344இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
    மயலாகும் மற்றும் பெயர்த்து.
  345. 345மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
    உற்றார்க்கு உடம்பும் மிகை.
  346. 346யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
    உயர்ந்த உலகம் புகும்.
  347. 347பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர் க்கு.
  348. 348தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
    வலைப்பட்டார் மற்றை யவர்.
  349. 349பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
    நிலையாமை காணப் படும்.
  350. 350பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு.
  351. 351பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.
  352. 352இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு.
  353. 353ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வானம் நணிய துடைத்து.
  354. 354ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
  355. 355எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
  356. 356கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி.
  357. 357ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
  358. 358பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
    செம்பொருள் காண்பது அறிவு.
  359. 359சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய்.
  360. 360காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
    நாமம் கெடக்கெடும் நோய்.
  361. 361அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
    தவாஅப் பிறப்பீனும் வித்து.
  362. 362வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
    வேண்டாமை வேண்ட வரும்.
  363. 363வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    ஆண்டும் அஃதொப்பது இல்.
  364. 364தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
    வாஅய்மை வேண்ட வரும்.
  365. 365அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
    அற்றாக அற்றது இலர்.
  366. 366அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
    வஞ்சிப்ப தோரும் அவா.
  367. 367அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
    தான்வேண்டு மாற்றான் வரும்.
  368. 368அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
    தவாஅது மேன்மேல் வரும்.
  369. 369இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.
  370. 370ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும்.
  371. 371ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்றும் மடி.
  372. 372பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூழ் உற்றக் கடை.
  373. 373நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும்.
  374. 374இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு.
  375. 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
    நல்லவாம் செல்வம் செயற்கு.
  376. 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம.
  377. 377வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
  378. 378துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
    ஊட்டா கழியு மெனின்.
  379. 379நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
    அல்லற் படுவ தெவன்?
  380. 380ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்.
  381. 381படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு.
  382. 382அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
  383. 383தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலனான் பவர்க்கு.
  384. 384அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
    மானம் உடைய தரசு.
  385. 385இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு.
  386. 386காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்
  387. 387இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
    தான்கண் டனைத்திவ் வுலகு.
  388. 388முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறையென்று வைக்கப் படும்.
  389. 389செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
  390. 390கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
    உடையானாம் வேந்தர்க் கொளி.
  391. 391கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.
  392. 392எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
  393. 393கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்.
  394. 394உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில்.
  395. 395உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்.
  396. 396தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
  397. 397யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு.
  398. 398ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து.
  399. 399தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்.
  400. 400கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை.
  401. 401அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல்.
  402. 402கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
    இல்லாதாள் பெண்காமுற் றற்று.
  403. 403கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
    சொல்லா திருக்கப் பெறின்.
  404. 404கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
    கொள்ளார் அறிவுடை யார்.
  405. 405கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும்.
  406. 406உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
    களரனையர் கல்லா தவர்.
  407. 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
    மண்மாண் புனைபாவை யற்று.
  408. 408நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
    கல்லார்கண் பட் ட திரு.
  409. 409மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
    கற்றார் அனைத்திலர் பாடு.
  410. 410விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
    கற்றாரோடு ஏனை யவர்.
  411. 411செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்து ளெல்லாந் தலை.
  412. 412செவுக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்.
  413. 413செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
    ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
  414. 414கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
    ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
  415. 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
    ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
  416. 416எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்.
  417. 417பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
    தீண்டிய கேள்வி யவர்.
  418. 418கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
    தோட்கப் படாத செவி.
  419. 419நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
    வாயின ராதல் அரிது.
  420. 420செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
    அவியினும் வாழினும் என்?
  421. 421அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண்.
  422. 422சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு.
  423. 423எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.
  424. 424எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு.
  425. 425உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
    கூம்பலும் இல்ல தறிவு.
  426. 426எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
    அவ்வ துறைவ தறிவு.
  427. 427அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்.
  428. 428அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
    அஞ்சல் அறிவார் தொழில்.
  429. 429எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
    அதிர வருவதோர் நோய்.
  430. 430அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்.
  431. 431செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
    பெருக்கம் பெருமித நீர்த்து.
  432. 432இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
    உவகையும் ஏதம் இறைக்கு.
  433. 433தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
    கொள்வர் பழிநாணு வார்.
  434. 434குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
    அற்றந் த்ரூஉம் பகை.
  435. 435வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்.
  436. 436தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
    என்குற்ற மாகும் இறைக்கு?
  437. 437செயற்பால செய்யா திவறியான் செல்வம்
    உயற்பால தன்றிக் கெடும்.
  438. 438பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
    எண்ணப் படுவதொன் றன்று.
  439. 439வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை.
  440. 440காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
    ஏதில ஏதிலார் நூல்.
  441. 441அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்.
  442. 442உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்.
  443. 443அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்.
  444. 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
    வன்மையு ளெல்லாந் தலை.
  445. 445சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
  446. 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில்.
  447. 447இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
    கெடுக்குந் தகைமை யவர்.
  448. 448இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்.
  449. 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை.
  450. 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
    நல்லார் தொடர்கை விடல்.
  451. 451சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாச் சூழ்ந்து விடும்.
  452. 452நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
    இனத்தியல்ப தாகும் அறிவு.
  453. 453மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
    இன்னான் எனப்படுஞ் சொல்.
  454. 454மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
    இனத்துள தாகும் அறிவு.
  455. 455மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
    இனந்தூய்மை தூவா வரும்.
  456. 456மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
    இல்லைநன் றாகா வினை.
  457. 457மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
    எல்லாப் புகழும் தரும்.
  458. 458மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
    இனநலம் ஏமாப் புடைத்து.
  459. 459மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
    இனநலத்தின் ஏமாப் புடைத்து.
  460. 460நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
    அல்லற் படுப்பதூஉம் இல்.
  461. 461அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமும் சூழ்ந்து செயல்.
  462. 462தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
    அரும்பொருள் யாதொன்றும் இல்
  463. 463ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
    ஊக்கார் அறிவுடை யார்.
  464. 464தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
    ஏதப்பாடு அஞ்சு பவர்.
  465. 465வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
    பாத்திப் படுப்பதோ ராறு.
  466. 466செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்.
  467. 467எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு.
  468. 468ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
    போற்றினும் பொத்துப் படும்.
  469. 469நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை.
  470. 470எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
    கொள்ளாத கொள்ளாது உலகு.
  471. 471வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல்.
  472. 472ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாதது இல்.
  473. 473உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
    இடைக்கண் முரிந்தார் பலர்.
  474. 474அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
    வியந்தான் விரைந்து கெடும்.
  475. 475பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்.
  476. 476நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
    உயிர்க்கிறுதி ஆகி விடும்.
  477. 477ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கு நெறி.
  478. 478ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
    போகாறு அகலாக் கடை.
  479. 479அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
    இல்லாகித் தோன்றாக் கெடும்.
  480. 480உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
    வளவரை வல்லைக் கெடும்.
  481. 481பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
  482. 482பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
    தீராமை ஆர்க்குங் கயிறு.
  483. 483அருவினை யென்ப உளவோ கருவியான்
    காலம் அற஧ந்து செயின்.
  484. 484ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
    கருதி இடத்தாற் செயின்.
  485. 485காலம் கருதி இருப்பர் கலங்காது
    ஞாலம் கருது பவர்.
  486. 486ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
    தாக்கற்குப் பேருந் தகைத்து.
  487. 487பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
    உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
  488. 488செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
    காணின் கிழக்காம் தலை.
  489. 489எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல்.
  490. 490கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து.
  491. 491தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
    இடங்கண்ட பின்அல் லது.
  492. 492முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
    ஆக்கம் பலவுந் தரும்.
  493. 493ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
    போற்றார்கண் போற்றிச் செயின்.
  494. 494எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
    துன்னியார் துன்னிச் செயின்.
  495. 495நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற.
  496. 496கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து.
  497. 497அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
    எண்ணி இடத்தால் செயின்.
  498. 498சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்.
  499. 499சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
    உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
  500. 500காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு.
  501. 501அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
    திறந்தெரிந்து தேறப் படும்.
  502. 502குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
    நாணுடையான் சுட்டே தெளிவு.
  503. 503அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு.
  504. 504குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.
  505. 505பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்.
  506. 506அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
    பற்றிலர் நாணார் பழி.
  507. 507காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
    பேதைமை எல்லாந் தரும்.
  508. 508தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
    தீரா இடும்பை தரும்.
  509. 509தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
    தேறுக தேறும் பொருள்.
  510. 510தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
    தீரா இடும்பை தரும்.
  511. 511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
    தன்மையான் ஆளப் படும்.
  512. 512வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
    ஆராய்வான் செய்க வினை.
  513. 513அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு.
  514. 514எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்.
  515. 515அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
    சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
  516. 516செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
    எய்த உணர்ந்து செயல்.
  517. 517இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.
  518. 518வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்.
  519. 519வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்கும் திரு.
  520. 520நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
    கோடாமை கோடா துலகு.
  521. 521பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள.
  522. 522விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவும் தரும்.
  523. 523அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று.
  524. 524சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
    பெற்றத்தால் பெற்ற பயன்.
  525. 525கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
    சுற்றத்தால் சுற்றப் படும்.
  526. 526பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
    மருங்குடையார் மாநிலத்து இல்.
  527. 527காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள.
  528. 528பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்.
  529. 529தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
    காரணம் இன்றி வரும்.
  530. 530உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
    இழைத் திருந்து எண்ணிக் கொளல்.
  531. 531இறந்த வெகுளியின் தீதே சிறந்த
    உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
  532. 532பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
    நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
  533. 533பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
    எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
  534. 534அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
    பொச்சாப் புடையார்க்கு நன்கு.
  535. 535முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
    பின்னூறு இரங்கி விடும்.
  536. 536இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
    வாயின் அதுவொப்பது இல்.
  537. 537அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
    கருவியால் போற்றிச் செயின்.
  538. 538புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
    இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
  539. 539இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
    மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
  540. 540உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளியது உள்ளப் பெறின்.
  541. 541ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை.
  542. 542வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
    கோல் நோக்கி வாழுங் குடி.
  543. 543அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.
  544. 544குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு.
  545. 545இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
    பெயலும் விளையுளும் தொக்கு.
  546. 546வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉங் கோடா தெனின்.
  547. 547இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
    முறைகாக்கும் முட்டாச் செயின்.
  548. 548எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்.
  549. 549குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
    வடுவன்று வேந்தன் தொழில்.
  550. 550கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்.
  551. 551கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
    அல்லவை செய்தொழுகும் வேந்து.
  552. 552வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு.
  553. 553நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாடொறும் நாடு கெடும்.
  554. 554கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
    சூழாது செய்யும் அரசு.
  555. 555அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை
  556. 556மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
    மன்னாவாம் மன்னர்க் கொளி.
  557. 557துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு.
  558. 558இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்.
  559. 559முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.
  560. 560ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்.
  561. 561தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
  562. 562கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்.
  563. 563வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
  564. 564இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்.
  565. 565அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்னது உடைத்து.
  566. 566கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
    நீடின்றி ஆங்கே கெடும்.
  567. 567கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
    அடுமுரண் தேய்க்கும் அரம்.
  568. 568இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
    சீறிற் சிறுகும் திரு.
  569. 569செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்.
  570. 570கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
    இல்லை நிலக்குப் பொறை.
  571. 571கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
    உண்மையான் உண்டிவ் வுலகு.
  572. 572கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
    உண்மை நிலக்குப் பொறை.
  573. 573பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
    கண்ணோட்டம் இல்லாத கண்.
  574. 574உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
    கண்ணோட்டம் இல்லாத கண்.
  575. 575கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
    புண்ணென்று உணரப் படும்
  576. 576மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
    டியைந்துகண் ணோடா தவர்.
  577. 577கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
    கண்ணோட்டம் இன்மையும் இல்.
  578. 578கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
    உரிமை உடைத்திவ் வுலகு.
  579. 579ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
    பொறுத்தாற்றும் பண்பே தலை.
  580. 580பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்.
  581. 581ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
    தெற்றென்க மன்னவன் கண்.
  582. 582எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்.
  583. 583ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
    கொற்றங் கொளக்கிடந்தது இல்.
  584. 584வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
    அனைவரையும் ஆராய்வது ஒற்று.
  585. 585கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று.
  586. 586துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
    என்செயினும் சோர்விலது ஒற்று.
  587. 587மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
    ஐயப்பாடு இல்லதே ஒற்று.
  588. 588ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
    ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
  589. 589ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
    சொற்றொக்க தேறப் படும்.
  590. 590சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
    புறப்படுத்தான் ஆகும் மறை.
  591. 591உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
    உடையது உடையரோ மற்று.
  592. 592உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.
  593. 593ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தம் கைத்துடை யார்.
  594. 594ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை.
  595. 595வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.
  596. 596உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
  597. 597சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு.
  598. 598உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு.
  599. 599பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    ஦வ்ருஉம் புலிதாக் குறின்.
  600. 600உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
    மரம்மக்க ளாதலே வேறு.
  601. 601குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும்.
  602. 602மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்.
  603. 603மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியும் தன்னினும் முந்து.
  604. 604குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
    மாண்ட உஞற்றி லவர்க்கு.
  605. 605நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்.
  606. 606படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது.
  607. 607இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
    மாண்ட உஞற்றி லவர்.
  608. 608மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
    அடிமை புகுத்தி விடும்.
  609. 609குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்.
  610. 610மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு.
  611. 611அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.
  612. 612வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
  613. 613தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு.
  614. 614தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்.
  615. 615இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்.
  616. 616முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்.
  617. 617மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளான் தாமரையி னாள்.
  618. 618பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி.
  619. 619தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.
  620. 620ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்.
  621. 621இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
  622. 622வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்.
  623. 623இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர்.
  624. 624மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
  625. 625அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்.
  626. 626அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
    ஓம்புதல் தேற்றா தவர்.
  627. 627இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதாம் மேல்.
  628. 628இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்பம் உறுதல் இலன்.
  629. 629இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்பம் உறுதல் இலன்.
  630. 630இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
  631. 631கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்டது அமைச்சு.
  632. 632வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
    ஐந்துடன் மாண்டது அமைச்சு.
  633. 633பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
    பொருத்தலும் வல்ல தமைச்சு.
  634. 634தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
    சொல்லலும் வல்லது அமைச்சு.
  635. 635அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
    திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
  636. 636மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
    யாவுள முன்நிற் பவை.
  637. 637செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
    இயற்கை அறிந்து செயல்.
  638. 638அறிகொன்று அறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்.
  639. 639பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
    எழுபது கோடி உறும்.
  640. 640முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
    திறப்பாடு இலாஅ தவர்.
  641. 641நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத்து உள்ளதூஉம் அன்று.
  642. 642ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
    காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
  643. 643கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்.
  644. 644திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங்கு இல்.
  645. 645சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
  646. 646வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
    மாட்சியின் மாசற்றார் கோள்.
  647. 647சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
  648. 648விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
  649. 649பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர்.
  650. 650இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
    உணர விரித்துரையா தார்.
  651. 651துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
    வேண்டிய எல்லாந் தரும்.
  652. 652என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
    நன்றி பயவா வினை.
  653. 653ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
    ஆஅதும் என்னு மவர்.
  654. 654இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
    நடுக்கற்ற காட்சி யவர்.
  655. 655எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றன்ன செய்யாமை நன்று.
  656. 656ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை.
  657. 657பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
    கழிநல் குரவே தலை.
  658. 658கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும்.
  659. 659அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
    பிற்பயக்கும் நற்பா லவை.
  660. 660சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
    கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
  661. 661வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
    மற்றைய எல்லாம் பிற.
  662. 662ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
  663. 663கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
    எற்றா விழுமந் தரும்.
  664. 664சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்.
  665. 665வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.
  666. 666எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்.
  667. 667உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து.
  668. 668கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல்.
  669. 669துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை.
  670. 670எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
    வேண்டாரை வேண்டாது உலகு.
  671. 671சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
    தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
  672. 672தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை.
  673. 673ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
    செல்லும்வாய் நோக்கிச் செயல்.
  674. 674வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
    தீயெச்சம் போலத் தெறும்.
  675. 675பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
    இருள்தீர எண்ணிச் செயல்.
  676. 676முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
    படுபயனும் பார்த்துச் செயல்.
  677. 677செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
    உள்ளறிவான் உள்ளம் கொளல்.
  678. 678வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
    யானையால் யானையாத் தற்று.
  679. 679நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
    ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
  680. 680உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
    கொள்வர் பெரியார்ப் பணிந்து.
  681. 681அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
    பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
  682. 682அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
    இன்றி யமையாத மூன்று.
  683. 683நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
    வென்றி வினையுரைப்பான் பண்பு.
  684. 684அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
    செறிவுடையான் செல்க வினைக்கு.
  685. 685தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாந் தூது.
  686. 686கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
    தக்கது அறிவதாம் தூது.
  687. 687கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
    எண்ணி உரைப்பான் தலை.
  688. 688தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
    வாய்மை வழியுரைப்பான் பண்பு.
  689. 689விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
    வாய்சேரா வன்கணவன்.
  690. 690இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
    உறுதி பயப்பதாம் தூது.
  691. 691அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
    இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
  692. 692மன்னர் விழைப விழையாமை மன்னரால்
    மன்னிய ஆக்கந் தரும்.
  693. 693போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது.
  694. 694செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
    ஆன்ற பெரியா ரகத்து.
  695. 695எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
    விட்டக்கால் கேட்க மறை.
  696. 696குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
    வேண்டுப வேட்பச் சொலல்.
  697. 697வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
    கேட்பினும் சொல்லா விடல்.
  698. 698இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
    ஒளியோடு ஒழுகப் படும்.
  699. 699கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
    துளக்கற்ற காட்சி யவர்.
  700. 700பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
    கெழுதகைமை கேடு தரும்.
  701. 701கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
    மாறாநீர் வையக் கணி.
  702. 702ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
    தெய்வத்தோ டொப்பக் கொளல்.
  703. 703குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்தும் கொளல்.
  704. 704குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
    உறுப்போ ரனையரால் வேறு.
  705. 705குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
    என்ன பயத்தவோ கண்?
  706. 706அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்.
  707. 707முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
    காயினும் தான்முந் துறும்.
  708. 708முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
    உற்ற துணர்வார்ப் பெறின்.
  709. 709பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
    வகைமை உணர்வார்ப் பெறின்.
  710. 710நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
    கண்ணல்லது இல்லை பிற.
  711. 711அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
  712. 712இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர்.
  713. 713அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
    வகையறியார் வல்லதூஉம் இல்.
  714. 714ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணம் கொளல்.
  715. 715நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
    முந்து கிளவாச் செறிவு.
  716. 716ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
    ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
  717. 717கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொல்தெரிதல் வல்லார் அகத்து.
  718. 718உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
    பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
  719. 719புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்குசலச் சொல்லு வார்.
  720. 720அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
    அல்லார்முன் கோட்டி கொளல்.
  721. 721வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
  722. 722கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
    கற்ற செலச்சொல்லு வார்.
  723. 723பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
    அவையகத்து அஞ்சா தவர்.
  724. 724கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்.
  725. 725ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
    மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
  726. 726வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
    நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
  727. 727பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
    அஞ்சு மவன்கற்ற நூல்.
  728. 728பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லா தார்.
  729. 729கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
    நல்லா ரவையஞ்சு வார்.
  730. 730உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
    கற்ற செலச்சொல்லா தார்.
  731. 731தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
    செல்வரும் சேர்வது நாடு.
  732. 732பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
    ஆற்ற விளைவது நாடு.
  733. 733பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
    இறையொருங்கு நேர்வது நாடு.
  734. 734உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
    சேரா தியல்வது நாடு.
  735. 735பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
    கொல்குறும்பும் இல்லது நாடு.
  736. 736கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
    நாடென்ப நாட்டின் தலை.
  737. 737இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
    வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
  738. 738பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிவ் வைந்து.
  739. 739நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
    நாட வளந்தரு நாடு.
  740. 740ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
    வேந்தமை வில்லாத நாடு.
  741. 741ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
    போற்று பவர்க்கும் பொருள்.
  742. 742மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்.
  743. 743உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
    அமைவரண் என்றுரைக்கும் நூல்.
  744. 744சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
    ஊக்கம் அழிப்ப தரண்.
  745. 745கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
    நிலைக்கெளிதாம் நீரது அரண்.
  746. 746எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
    நல்லாள் உடையது அரண்.
  747. 747முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
    பற்றற் கரியது அரண்.
  748. 748முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
    பற்றியார் வெல்வது அரண்.
  749. 749முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
    வீறெய்தி மாண்ட தரண்.
  750. 750எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
    இல்லார்கண் இல்லது அரண்.
  751. 751பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்லது இல்லை பொருள்.
  752. 752இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
    எல்லாரும் செய்வர் சிறப்பு.
  753. 753பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று.
  754. 754அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்.
  755. 755அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்.
  756. 756உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
    தெறுபொருளும் வேந்தன் பொருள்.
  757. 757அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
    செல்வச் செவிலியால் உண்டு.
  758. 758குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
    உண்டாகச் செய்வான் வினை.
  759. 759செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃகதனிற் கூரிய தில்.
  760. 760ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
    ஏனை இரண்டும் ஒருங்கு.
  761. 761உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
    வெறுக்கையுள் எல்லாம் தலை.
  762. 762உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
    தொல்படைக் கல்லால் அரிது.
  763. 763ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்.
  764. 764அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
    வன்க ணதுவே படை.
  765. 765கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை.
  766. 766மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
    எனநான்கே ஏமம் படைக்கு.
  767. 767தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
    போர்தாங்கும் தன்மை அறிந்து.
  768. 768அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
    படைத்தகையால் பாடு பெறும்.
  769. 769சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
    இல்லாயின் வெல்லும் படை.
  770. 770நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
    தலைமக்கள் இல்வழி இல்.
  771. 771என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
    முன்நின்று கல்நின் றவர்.
  772. 772கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
  773. 773பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
    ஊராண்மை மற்றதன் எஃகு.
  774. 774கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்.
  775. 775விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
    ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
  776. 776விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
    வைக்கும்தன் நாளை எடுத்து.
  777. 777சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
    கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
  778. 778உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
    செறினும் சீர்குன்றல் இலர்.
  779. 779இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
    பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
  780. 780புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
    இரந்துகோள் தக்கது உடைத்து.
  781. 781செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
    வினைக்கரிய யாவுள காப்பு.
  782. 782நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
    பின்னீர பேதையார் நட்பு.
  783. 783நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.
  784. 784நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்செனறு இடித்தற் பொருட்டு.
  785. 785புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்.
  786. 786முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு.
  787. 787அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
    அல்லல் உழப்பதாம் நட்பு.
  788. 788உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.
  789. 789நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
    ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
  790. 790இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
    புனையினும் புல்லென்னும் நட்பு.
  791. 791நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
    வீடில்லை நட்பாள் பவர்க்கு.
  792. 792ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
    தான்சாம் துயரம் தரும்.
  793. 793குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு.
  794. 794குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
  795. 795அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
    வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
  796. 796கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்.
  797. 797ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
    கேண்மை ஒரீஇ விடல்.
  798. 798உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
    அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
  799. 799கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
    உள்ளினும் உள்ளஞ் சுடும்.
  800. 800மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
    ஒருவுக ஒப்பிலார் நட்பு.
  801. 801பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
  802. 802நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
    உப்பாதல் சான்றோர் கடன்.
  803. 803பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
    செய்தாங்கு அமையாக் கடை.
  804. 804விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
    கேளாது நட்டார் செயின்.
  805. 805பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
    நோதக்க நட்டார் செயின்.
  806. 806எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
    தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
  807. 807அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
    வழிவந்த கேண்மை யவர்.
  808. 808கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
    நாளிழுக்கம் நட்டார் செயின்.
  809. 809கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
    விடாஅர் விழையும் உலகு.
  810. 810விழையார் விழையப் படுப பழையார்கண்
    பண்பின் தலைப்பிரியா தார்.
  811. 811பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்றல் இனிது.
  812. 812உறின்நட்டு அறினொருஉம் ஒப்பிலார் கேண்மை
    பெறினும் இழப்பினும் என்?
  813. 813உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
    கொள்வாரும் கள்வரும் நேர்.
  814. 814அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
    தமரின் தனிமை தலை.
  815. 815செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
    எய்தலின் எய்தாமை நன்று.
  816. 816பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
    ஏதின்மை கோடி உறும்.
  817. 817நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
    பத்தடுத்த கோடி உறும்.
  818. 818ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
    சொல்லாடார் சோர விடல்.
  819. 819கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு.
  820. 820எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
    மன்றில் பழிப்பார் தொடர்பு.
  821. 821சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு.
  822. 822இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
    மனம்போல வேறு படும்.
  823. 823பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது.
  824. 824முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.
  825. 825மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
    சொல்லினால் தேறற்பாற்று அன்று.
  826. 826நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப் படும்.
  827. 827சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்.
  828. 828தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து.
  829. 829மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
    நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
  830. 830பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
    அகநட்பு ஒரீஇ விடல்.
  831. 831பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
    ஊதியம் போக விடல்.
  832. 832பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
    கையல்ல தன்கட் செயல்.
  833. 833நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்
  834. 834ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையின் பேதையார் இல்.
  835. 835ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
    தான்புக் கழுந்தும் அளறு.
  836. 836பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்.
  837. 837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
    பெருஞ்செல்வம் உற்றக் கடை.
  838. 838மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
    கையொன்று உடைமை பெறின்.
  839. 839பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
    பீழை தருவதொன் றில்.
  840. 840கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
    குழாஅத்துப் பேதை புகல்.
  841. 841அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
    இன்மையா வையா துலகு.
  842. 842அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
    இல்லை பெறுவான் தவம்.
  843. 843அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது.
  844. 844வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
    உடையம்யாம் என்னும் செருக்கு.
  845. 845கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
    வல்லதூஉம் ஐயம் தரும்.
  846. 846அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
    குற்றம் மறையா வழி.
  847. 847அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
    பெருமிறை தானே தனக்கு.
  848. 848ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவுமோர் நோய்.
  849. 849காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு.
  850. 850உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும்.
  851. 851இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பார஧க்கும் நோய்.
  852. 852பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை.
  853. 853இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்.
  854. 854இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.
  855. 855இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
    மிக்லூக்கும் தன்மை யவர்.
  856. 856இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
    தவலும் கெடலும் நணித்து.
  857. 857மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்.
  858. 858இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
    மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
  859. 859இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு.
  860. 860இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு.
  861. 861வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
    மெலியார்மேல் மேக பகை.
  862. 862அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
    என்பரியும் ஏதிலான் துப்பு.
  863. 863அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
    தஞ்சம் எளியன் பகைக்கு.
  864. 864நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
    யாங்கணும் யார்க்கும் எளிது.
  865. 865வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
    பண்பிலன் பற்றார்க்கு இனிது.
  866. 866காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
    பேணாமை பேணப் படும்.
  867. 867கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
    மாணாத செய்வான் பகை.
  868. 868குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
    இனனிலனாம் ஏமாப் புடைத்து.
  869. 869செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
    அஞ்சும் பகைவர்ப் பெறின்.
  870. 870கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
    ஒல்லானை ஒல்லா தொளி.
  871. 871பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
    நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
  872. 872வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
    சொல்லேர் உழவர் பகை.
  873. 873ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
    பல்லார் பகைகொள் பவன்.
  874. 874பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
    தகைமைக்கண் தங்கிற்று உலகு.
  875. 875தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
    இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
  876. 876தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
    தேறான் பகாஅன் விடல்.
  877. 877நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
    மென்மை பகைவர் அகத்து.
  878. 878வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு.
  879. 879இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து.
  880. 880உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
    செம்மல் சிதைக்கலா தார்.
  881. 881நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
    இன்னாவாம் இன்னா செயின்.
  882. 882வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
    கேள்போல் பகைவர் தொடர்பு.
  883. 883உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
    மட்பகையின் மாணத் தெறும்.
  884. 884மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
    ஏதம் பலவும் தரும்.
  885. 885உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
    ஏதம் பலவும் தரும்.
  886. 886ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
    பொன்றாமை ஒன்றல் அரிது.
  887. 887செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
    உட்பகை உற்ற குடி.
  888. 888அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
    உட்பகை உற்ற குடி.
  889. 889எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
    உட்பகை உள்ளதாங் கேடு.
  890. 890உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
    பாம்போடு உடனுறைந் தற்று.
  891. 891ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
    போற்றலுள் எல்லாம் தலை.
  892. 892பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
    பேரா இடும்பை தரும்.
  893. 893கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
    ஆற்று பவர்கண் இழுக்கு.
  894. 894கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
    ஆற்றாதார் இன்னா செயல்.
  895. 895யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
    வேந்து செறப்பட் டவர்.
  896. 896எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
  897. 897வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
    தகைமாண்ட தக்கார் செறின்.
  898. 898குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
    நின்றன்னார் மாய்வர் நிலத்து.
  899. 899ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
    வேந்தனும் வேந்து கெடும்.
  900. 900இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
    சிறந்தமைந்த சீரார் செறின்.
  901. 901மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
    வேண்டாப் பொருளும் அது.
  902. 902பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
    நாணாக நாணுத் தரும்.
  903. 903இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
    நல்லாருள் நாணுத் தரும்.
  904. 904மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
    வினையாண்மை வீறெய்த லின்று.
  905. 905இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
    நல்லார்க்கு நல்ல செயல்.
  906. 906இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
    அமையார்தோள் அஞ்சு பவர்.
  907. 907பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை உடைத்து.
  908. 908நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
    பெட் டாங்கு ஒழுகு பவர்.
  909. 909அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
    பெண்ஏவல் செய்வார்கண் இல்.
  910. 910எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
    பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
  911. 911அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
    இன்சொல் இழுக்குத் தரும்.
  912. 912பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
    நயன்தூக்கி நள்ளா விடல்.
  913. 913பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏத஧ல் பிணந்தழீஇ அற்று.
  914. 914பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
    ஆயும் அறிவி னவர்.
  915. 915பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
    மாண்ட அறிவி னவர்.
  916. 916தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
    புன்னலம் பாரிப்பார் தோள்.
  917. 917நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
    பேணிப் புணர்பவர் தோள்.
  918. 918ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
    மாய மகளிர் முயக்கு.
  919. 919வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
    பூரியர்கள் ஆழும் அளறு.
  920. 920இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு.
  921. 921உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
    கட்காதல் கொண்டொழுகு வார்.
  922. 922உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
    எண்ணப் படவேண்டா தார்.
  923. 923ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
    சான்றோர் முகத்துக் களி.
  924. 924நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
    பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
  925. 925கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
    மெய்யறி யாமை கொளல்.
  926. 926துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
    நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
  927. 927உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
    கள்ளொற்றிக் கண்சாய் பவர்
  928. 928களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
    ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
  929. 929களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
    குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
  930. 930கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
    உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
  931. 931வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
    தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
  932. 932ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
    நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
  933. 933உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
    போஒய்ப் புறமே படும்.
  934. 934சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
    வறுமை தருவதொன்று இல்.
  935. 935கவறும் கழகமும் கையும் தருக்கி
    இவறியார் இல்லாகி யார்.
  936. 936அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
    முகடியான் மூடப்பட் டார்.
  937. 937பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
    கழகத்துக் காலை புகின்.
  938. 938பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
    அல்லல் உழப்பிக்கும் சூது.
  939. 939உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
    அடையாவாம் ஆயங் கொளின்.
  940. 940இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற்று உயிர்.
  941. 941மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று.
  942. 942மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்.
  943. 943அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
  944. 944அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து.
  945. 945மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
  946. 946இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்.
  947. 947தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும்.
  948. 948நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்.
  949. 949உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
    கற்றான் கருதிச் செயல்.
  950. 950உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
    அப்பால் நாற் கூற்றே மருந்து.
  951. 951இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
    செப்பமும் நாணும் ஒருங்கு.
  952. 952ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
    இழுக்கார் குடிப்பிறந் தார்.
  953. 953நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
    வகையென்ப வாய்மைக் குடிக்கு.
  954. 954அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர்.
  955. 955வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பில் தலைப்பிரிதல் இன்று.
  956. 956சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்தும் என் பார்.
  957. 957குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
    மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து.
  958. 958நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்.
  959. 959நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
  960. 960நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
    வேண்டுக யார்க்கும் பணிவு.
  961. 961இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
    குன்ற வருப விடல்.
  962. 962சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
    பேராண்மை வேண்டு பவர்.
  963. 963பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு.
  964. 964தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை.
  965. 965குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
    குன்றி அனைய செயின்.
  966. 966புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
    இகழ்வார்பின் சென்று நிலை.
  967. 967ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
    கெட்டான் எனப்படுதல் நன்று.
  968. 968மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
    பீடழிய வந்த இடத்து.
  969. 969மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்.
  970. 970இளிவரின் வாழாத மானம் உடையார்
    ஒளிதொழுது ஏத்தும் உலகு.
  971. 971ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
    அஃதிறந்து வாழ்தும் எனல்.
  972. 972பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.
  973. 973மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழல் லவர்.
  974. 974ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
  975. 975பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை உடைய செயல்.
  976. 976சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
  977. 977இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
    சீரல் லவர்கண் படின்.
  978. 978பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து.
  979. 979பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்.
  980. 980அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்.
  981. 981கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
    சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
  982. 982குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
  983. 983அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
    ஐந்துசால் ஊன்றிய தூண்.
  984. 984கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
    சொல்லா நலத்தது சால்பு.
  985. 985ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை.
  986. 986சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
    துலையல்லார் கண்ணும் கொளல்.
  987. 987இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு.
  988. 988இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
    திண்மை உண் டாகப் பெறின்.
  989. 989ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
    ஆழி எனப்படு வார்.
  990. 990சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
    தாங்காது மன்னோ பொறை.
  991. 991எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு.
  992. 992அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு.
  993. 993உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
    பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
  994. 994நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
    பண்புபா ராட்டும் உலகு.
  995. 995நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு.
  996. 996பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
    மண்புக்கு மாய்வது மன்.
  997. 997அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண்பு இல்லா தவர்.
  998. 998நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
    பண்பாற்றார் ஆதல் கடை.
  999. 999நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
    பகலும்பாற் பட்டன்று இருள்.
  1000. 1000பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யால்திரிந் தற்று.
  1001. 1001வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
    செத்தான் செயக்கிடந்தது இல்.
  1002. 1002பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
    மருளானாம் மாணாப் பிறப்பு
  1003. 1003ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
    தோற்றம் நிலக்குப் பொறை.
  1004. 1004எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்.
  1005. 1005கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
    கோடியுண் டாயினும் இல்.
  1006. 1006ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
    ஈதல் இயல்பிலா தான்.
  1007. 1007அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
    பெற்றாள் தமியள்மூத் தற்று.
  1008. 1008நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
    நச்சு மரம்பழுத் தற்று.
  1009. 1009அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
    ஒண்பொருள் கொள்வார் பிறர்.
  1010. 1010சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
    வறங்கூர்ந் தனையது உடைத்து.
  1011. 1011கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
    நல்லவர் நாணுப் பிற.
  1012. 1012ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
    நாணுடைமை மாந்தர் சிறப்பு.
  1013. 1013ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
    நன்மை குறித்தது சால்பு.
  1014. 1014அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
    பிணிஅன்றோ பீடு நடை.
  1015. 1015பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
    உறைபதி என்னும் உலகு.
  1016. 1016நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
    பேணலர் மேலா யவர்.
  1017. 1017நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்.
  1018. 1018பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
    அறம்நாணத் தக்கது உடைத்து.
  1019. 1019குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
    நாணின்மை நின்றக் கடை.
  1020. 1020நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி அற்று.
  1021. 1021கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
    பெருமையின் பீடுடையது இல்.
  1022. 1022ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
    நீள்வினையால் நீளும் குடி.
  1023. 1023குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான்முந் துறும்.
  1024. 1024சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
    தாழாது உஞற்று பவர்க்கு.
  1025. 1025குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
    சுற்றமாச் சுற்றும் உலகு.
  1026. 1026நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
    இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
  1027. 1027அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை.
  1028. 1028குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
    மானங் கருதக் கெடும்.
  1029. 1029இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
    குற்ற மறைப்பான் உடம்பு.
  1030. 1030இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
    நல்லாள் இலாத குடி.
  1031. 1031சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை.
  1032. 1032உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
    எழுவாரை எல்லாம் பொறுத்து.
  1033. 1033உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.
  1034. 1034பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
    அலகுடை நீழ லவர்.
  1035. 1035இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்.
  1036. 1036உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேம்என் பார்க்கும் நிலை.
  1037. 1037தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
    வேண்டாது சாலப் படும்.
  1038. 1038ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
    நீரினும் நன்றதன் காப்பு.
  1039. 1039செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
    இல்லாளின் ஊடி விடும்.
  1040. 1040இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும்.
  1041. 1041இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது.
  1042. 1042இன்மை எனவொரு பாவி மறுமையும்
    இம்மையும் இன்றி வரும்.
  1043. 1043தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
    நல்குரவு என்னும் நசை.
  1044. 1044இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
    சொற்பிறக்கும் சோர்வு தரும்.
  1045. 1045நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
    துன்பங்கள் சென்று படும்.
  1046. 1046நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
    சொற்பொருள் சோர்வு படும்.
  1047. 1047அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
    பிறன்போல நோக்கப் படும்.
  1048. 1048இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
    கொன்றது போலும் நிரப்பு.
  1049. 1049நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
    யாதொன்றும் கண்பாடு அரிது.
  1050. 1050துப்புர வில்லார் துவரத் துறவாமை
    உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
  1051. 1051இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
    அவர்பழி தம்பழி அன்று.
  1052. 1052இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
    துன்பம் உறாஅ வரின்.
  1053. 1053கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
    இரப்புமோ ரேஎர் உடைத்து.
  1054. 1054இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
    கனவிலும் தேற்றாதார் மாட்டு.
  1055. 1055கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
    இரப்பவர் மேற்கொள் வது.
  1056. 1056கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
    எல்லாம் ஒருங்கு கெடும்.
  1057. 1057இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்பது உடைத்து.
  1058. 1058இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
    மரப்பாவை சென்றுவந் தற்று.
  1059. 1059ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
    மேவார் இலாஅக் கடை.
  1060. 1060இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
    தானேயும் சாலும் கரி.
  1061. 1061கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்.
  1062. 1062இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்.
  1063. 1063இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
    வன்மையின் வன்பாட்ட தில்.
  1064. 1064இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு.
  1065. 1065தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
    உண்ணலின் ஊங்கினிய தில்.
  1066. 1066ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
    இரவின் இளிவந்த தில்.
  1067. 1067இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
    கரப்பார் இரவன்மின் என்று.
  1068. 1068இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
    பார்தாக்கப் பக்கு விடும்.
  1069. 1069இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
  1070. 1070கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
    சொல்லாடப் போஒம் உயிர்.
  1071. 1071மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்.
  1072. 1072நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
    நெஞ்சத்து அவலம் இலர்.
  1073. 1073தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்.
  1074. 1074அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
    மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
  1075. 1075அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
  1076. 1076அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
  1077. 1077ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
    கூன்கையர் அல்லா தவர்க்கு.
  1078. 1078சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
    கொல்லப் பயன்படும் கீழ்.
  1079. 1079உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்.
  1080. 1080எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
    விற்றற்கு உரியர் விரைந்து.
  1081. 1081அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
  1082. 1082நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
    தானைக்கொண் டன்ன துடைத்து.
  1083. 1083பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
    பெண்டகையால் பேரமர்க் கட்டு.
  1084. 1084கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
    பேதைக்கு அமர்த்தன கண்.
  1085. 1085கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கமிம் மூன்றும் உடைத்து.
  1086. 1086கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
    செய்யல மன்இவள் கண்.
  1087. 1087கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
    படாஅ முலைமேல் துகில்.
  1088. 1088ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும் உட்குமென் பீடு.
  1089. 1089பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
    அணியெவனோ ஏதில தந்து.
  1090. 1090உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
    கண்டார் மகிழ்செய்தல் இன்று.
  1091. 1091இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
  1092. 1092கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
    செம்பாகம் அன்று பெரிது.
  1093. 1093நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
    யாப்பினுள் அட்டிய நீர்.
  1094. 1094யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.
  1095. 1095குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்
  1096. 1096உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
    ஒல்லை உணரப் படும்.
  1097. 1097செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
    உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
  1098. 1098அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
    பசையினள் பைய நகும்.
  1099. 1099ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
    காதலார் கண்ணே உள.
  1100. 1100கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல.
  1101. 1101கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
    ஒண்தொடி கண்ணே உள.
  1102. 1102பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
    தன்நோய்க்குத் தானே மருந்து.
  1103. 1103தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு.
  1104. 1104நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
    தீயாண்டுப் பெற்றாள் இவள்?
  1105. 1105வேட்ட பொழுதின் அவையவை போலுமே
    தோட்டார் கதுப்பினாள் தோள்.
  1106. 1106உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
    அமிழ்தின் இயன்றன தோள்.
  1107. 1107தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
    அம்மா அரிவை முயக்கு.
  1108. 1108வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு.
  1109. 1109ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
    கூடியார் பெற்ற பயன்.
  1110. 1110அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
    செறிதோறும் சேயிழை மாட்டு.
  1111. 1111நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
    மென்னீரள் யாம்வீழ் பவள்.
  1112. 1112மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
    பலர்காணும் பூவொக்கும் என்று.
  1113. 1113முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
    வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
  1114. 1114காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
    மாணிழை கண்ணொவ்வேம் என்று.
  1115. 1115அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
    நல்ல படாஅ பறை.
  1116. 1116மதியும் மடந்தை முகனும் அறியா
    பதியின் கலங்கிய மீன்.
  1117. 1117அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல
    மறுவுண்டோ மாதர் முகத்து.
  1118. 1118மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
    காதலை வாழி மத஧.
  1119. 1119மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி.
  1120. 1120அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
    அடிக்கு நெருஞ்சிப் பழம்.
  1121. 1121பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்.
  1122. 1122உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு.
  1123. 1123கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
    திருநுதற்கு இல்லை இடம்.
  1124. 1124வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
    அதற்கன்னள் நீங்கும் இடத்து.
  1125. 1125உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
    ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
  1126. 1126கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
    நுண்ணியர்எம் காத லவர்.
  1127. 1127கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
  1128. 1128நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக் கறிந்து.
  1129. 1129இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
    ஏதிலர் என்னும் இவ் வூர்.
  1130. 1130உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
    ஏதிலர் என்னும் இவ் வூர்.
  1131. 1131காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
    மடலல்லது இல்லை வலி.
  1132. 1132நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
    நாணினை நீக்கி நிறுத்து.
  1133. 1133நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
    காமுற்றார் ஏறும் மடல்.
  1134. 1134காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
    நல்லாண்மை என்னும் புணை.
  1135. 1135தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
    மாலை உழக்கும் துயர்.
  1136. 1136மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
    படல்ஒல்லா பேதைக்கென் கண்.
  1137. 1137கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணின் பெருந்தக்க தில்.
  1138. 1138நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
    மறையிறந்து மன்று படும்.
  1139. 1139அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
    மறுகின் மறுகும் மருண்டு.
  1140. 1140யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
    யாம்பட்ட தாம்படா ஆறு.
  1141. 1141அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
    பலரறியார் பாக்கியத் தால்.
  1142. 1142மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
    அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
  1143. 1143உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
    பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
  1144. 1144கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
    தவ்வென்னும் தன்மை இழந்து.
  1145. 1145களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
    வெளிப்படுந் தோறும் இனிது.
  1146. 1146கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று.
  1147. 1147ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
    நீராக நீளும்இந் நோய்.
  1148. 1148நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
    காமம் நுதுப்பேம் எனல்.
  1149. 1149அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
    பலர்நாண நீத்தக் கடை.
  1150. 1150தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
    கெளவை எடுக்கும்இவ் வூர்.
  1151. 1151செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை.
  1152. 1152இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
    புன்கண் உடைத்தால் புணர்வு.
  1153. 1153அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்.
  1154. 1154அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
    தேறியார்க்கு உண்டோ தவறு.
  1155. 1155ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
    நீங்கின் அரிதால் புணர்வு.
  1156. 1156பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
    நல்குவர் என்னும் நசை.
  1157. 1157துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
    இறைஇறவா நின்ற வளை.
  1158. 1158இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
    இன்னாது இனியார்ப் பிரிவு.
  1159. 1159தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
    விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
  1160. 1160அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
    பின்இருந்து வாழ்வார் பலர்.
  1161. 1161மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
    ஊற்றுநீர் போல மிகும்.
  1162. 1162கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
    உரைத்தலும் நாணுத் தரும்.
  1163. 1163காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
    நோனா உடம்பின் அகத்து.
  1164. 1164காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்.
  1165. 1165துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
    நட்பினுள் ஆற்று பவர்.
  1166. 1166இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
    துன்பம் அதனிற் பெரிது.
  1167. 1167காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
    யாமத்தும் யானே உளேன்.
  1168. 1168மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
    என்னல்லது இல்லை துணை.
  1169. 1169கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
    நெடிய கழியும் இரா.
  1170. 1170உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
    நீந்தல மன்னோஎன் கண்.
  1171. 1171கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
    தாம்காட்ட யாம்கண் டது.
  1172. 1172தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
    பைதல் உழப்பது எவன்?
  1173. 1173கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
    இதுநகத் தக்க துடைத்து.
  1174. 1174பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
    உய்வில்நோய் என்கண் நிறுத்து.
  1175. 1175படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
    காமநோய் செய்தஎன் கண்.
  1176. 1176ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
    தாஅம் இதற்பட் டது.
  1177. 1177உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
    வேண்டி அவர்க்கண்ட கண்.
  1178. 1178பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
    காணாது அமைவில கண்.
  1179. 1179வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
    ஆரஞர் உற்றன கண்.
  1180. 1180மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
    அறைபறை கண்ணார் அகத்து.
  1181. 1181நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
    பண்பியார்க்கு உரைக்கோ பிற.
  1182. 1182அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
    மேனிமேல் ஊரும் பசப்பு.
  1183. 1183சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து.
  1184. 1184உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
    கள்ளம் பிறவோ பசப்பு.
  1185. 1185உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
    மேனி பசப்பூர் வது.
  1186. 1186விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
  1187. 1187புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
    அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
  1188. 1188பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
    துறந்தார் அவர்என்பார் இல்.
  1189. 1189பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
    நன்னிலையர் ஆவர் எனின்.
  1190. 1190பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
    நல்காமை தூற்றார் எனின்.
  1191. 1191தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
    காமத்துக் காழில் கனி.
  1192. 1192வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
    வீழ்வார் அள஧ க்கும் அளி.
  1193. 1193வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
    வாழுநம் என்னும் செருக்கு.
  1194. 1194வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்.
  1195. 1195நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
    தாம்காதல் கொள்ளாக் கடை.
  1196. 1196ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
    இருதலை யானும் இனிது.
  1197. 1197பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
    ஒருவர்கண் நின்றொழுகு வான்.
  1198. 1198வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
    வாழ்வாரின் வன்கணார் இல்.
  1199. 1199நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
    இசையும் இனிய செவிக்கு.
  1200. 1200உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
    செறாஅஅய் வாழிய நெஞ்சு.
  1201. 1201உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
    கள்ளினும் காமம் இனிது.
  1202. 1202எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
    நினைப்ப வருவதொன்று ஏல்.
  1203. 1203நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
    சினைப்பது போன்று கெடும்.
  1204. 1204யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
    ஓஒ உளரே அவர்.
  1205. 1205தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
    எம்நெஞ்சத்து ஓவா வரல்.
  1206. 1206மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
    உற்றநாள் உள்ள உளேன்.
  1207. 1207மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
    உள்ளினும் உள்ளம் சுடும்.
  1208. 1208எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
    காதலர் செய்யும் சிறப்பு.
  1209. 1209விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
    அளியின்மை ஆற்ற நினைந்து.
  1210. 1210விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
    படாஅதி வாழி மதி.
  1211. 1211காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
    யாதுசெய் வேன்கொல் விருந்து.
  1212. 1212கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
    உயலுண்மை சாற்றுவேன் மன்.
  1213. 1213நனவினால் நல்கா தவரைக் கனவினால்
    காண்டலின் உண்டென் உயிர்.
  1214. 1214கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
    நல்காரை நாடித் தரற்கு.
  1215. 1215நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
    கண்ட பொழுதே இனிது.
  1216. 1216நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
    காதலர் நீங்கலர் மன்.
  1217. 1217நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
    என்எம்மைப் பீழிப் பது.
  1218. 1218துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
    நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
  1219. 1219நனவினால் நல்காரை நோவர் கனவினால்
    காதலர்க் காணா தவர்.
  1220. 1220நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
    காணார்கொல் இவ்வூ ரவர்.
  1221. 1221மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
    வேலைநீ வாழி பொழுது.
  1222. 1222புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
    வன்கண்ண தோநின் துணை.
  1223. 1223பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
    துன்பம் வளர வரும்.
  1224. 1224காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
    ஏதிலர் போல வரும்.
  1225. 1225காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
    மாலைக்குச் செய்த பகை?
  1226. 1226மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
    காலை அறிந்த திலேன்.
  1227. 1227காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
    மாலை மலரும்இந் நோய்.
  1228. 1228அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை.
  1229. 1229பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
    மாலை படர்தரும் போழ்து.
  1230. 1230பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
    மாயும்என் மாயா உயிர்.
  1231. 1231சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
    நறுமலர் நாணின கண்.
  1232. 1232நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
    பசந்து பனிவாரும் கண்.
  1233. 1233தணந்தமை சால அறிவிப்ப போலும்
    மணந்தநாள் வீங்கிய தோள்.
  1234. 1234பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
    தொல்கவின் வாடிய தோள்.
  1235. 1235கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
    தொல்கவின் வாடிய தோள்.
  1236. 1236தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
    கொடியர் எனக்கூறல் நொந்து.
  1237. 1237பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
    வாடுதோட் பூசல் உரைத்து.
  1238. 1238முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
    பைந்தொடிப் பேதை நுதல்.
  1239. 1239முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
    பேதை பெருமழைக் கண்.
  1240. 1240கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
    ஒண்ணுதல் செய்தது கண்டு.
  1241. 1241நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
    எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
  1242. 1242காதல் அவரிலர் ஆகநீ நோவது
    பேதைமை வாழியென் நெஞ்சு.
  1243. 1243இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
    பைதல்நோய் செய்தார்கண் இல்.
  1244. 1244கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
    தின்னும் அவர்க்காணல் உற்று.
  1245. 1245செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
    உற்றால் உறாஅ தவர்.
  1246. 1246கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
    பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
  1247. 1247காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
    யானோ பொறேன்இவ் விரண்டு.
  1248. 1248பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
    பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
  1249. 1249உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
    யாருழைச் சேறியென் நெஞ்சு.
  1250. 1250துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
    இன்னும் இழத்தும் கவின்.
  1251. 1251காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
    நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
  1252. 1252காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
    யாமத்தும் ஆளும் தொழில்.
  1253. 1253மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
    தும்மல்போல் தோன்றி விடும்.
  1254. 1254நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
    மறையிறந்து மன்று படும்.
  1255. 1255செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
    உற்றார் அறிவதொன்று அன்று.
  1256. 1256செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
    எற்றென்னை உற்ற துயர்.
  1257. 1257நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
    பேணியார் பெட்ப செயின்.
  1258. 1258பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
    பெண்மை உடைக்கும் படை.
  1259. 1259புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
    கலத்தல் உறுவது கண்டு.
  1260. 1260நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
    புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
  1261. 1261வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்.
  1262. 1262இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
    கலங்கழியும் காரிகை நீத்து.
  1263. 1263உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
    வரல்நசைஇ இன்னும் உளேன்.
  1264. 1264கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
    கோடுகொ டேறுமென் நெஞ்சு.
  1265. 1265காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
    நீங்கும்என் மென்தோள் பசப்பு.
  1266. 1266வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
    பைதல்நோய் எல்லாம் கெட.
  1267. 1267புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
    கண்அன்ன கேளிர் விரன்.
  1268. 1268வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து.
  1269. 1269ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
    வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
  1270. 1270பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
    உள்ளம் உடைந்துக்கக் கால்.
  1271. 1271கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
    உரைக்கல் உறுவதொன் றுண்டு.
  1272. 1272கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
    பெண்நிறைந்த நீர்மை பெரிது.
  1273. 1273மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
    அணியில் திகழ்வதொன்று உண்டு.
  1274. 1274முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
  1275. 1275செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
    தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
  1276. 1276பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
    அன்பின்மை சூழ்வ துடைத்து.
  1277. 1277தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
    முன்னம் உணர்ந்த வளை.
  1278. 1278நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
    எழுநாளேம் மேனி பசந்து.
  1279. 1279தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
    அஃதாண் டவள்செய் தது.
  1280. 1280பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
    காமநோய் சொல்லி இரவு.
  1281. 1281உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
    கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
  1282. 1282தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
    காமம் நிறைய வரின்.
  1283. 1283பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
    காணா தமையல கண்.
  1284. 1284ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
    கூடற்கண் சென்றது என் னெஞ்சு.
  1285. 1285எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
    பழிகாணேன் கண்ட இடத்து.
  1286. 1286காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
    காணேன் தவறல் லவை.
  1287. 1287உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
    பொய்த்தல் அறிந்தென் புலந்து.
  1288. 1288இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
    கள்ளற்றே கள்வநின் மார்பு.
  1289. 1289மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
    செவ்வி தலைப்படு வார்.
  1290. 1290கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
    என்னினும் தான்விதுப் புற்று.
  1291. 1291அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
    நீஎமக்கு ஆகா தது.
  1292. 1292உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
    செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
  1293. 1293கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
    பெட்டாங்கு அவர்பின் செலல்.
  1294. 1294இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
    துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
  1295. 1295பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
    அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
  1296. 1296தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
    தினிய இருந்ததென் நெஞ்சு.
  1297. 1297நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
    மாணா மடநெஞ்சிற் பட்டு.
  1298. 1298எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
    உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
  1299. 1299துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சந் துணையல் வழி.
  1300. 1300தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
    நெஞ்சம் தமரல் வழி.
  1301. 1301புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
    அல்லல்நோய் காண்கம் சிறிது.
  1302. 1302உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்.
  1303. 1303அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல்.
  1304. 1304ஊடி யவரை உணராமை வாடிய
    வள்ளி முதலரிந் தற்று.
  1305. 1305நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
    பூஅன்ன கண்ணார் அகத்து.
  1306. 1306துனியும் புலவியும் இல்லாயின் காமம்
    கனியும் கருக்காயும் அற்று.
  1307. 1307ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
    நீடுவ தன்று கொல் என்று.
  1308. 1308நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
    காதலர் இல்லா வழி.
  1309. 1309நீரும் நிழலது இனிதே புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது.
  1310. 1310ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
    கூடுவேம் என்பது அவா.
  1311. 1311பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு.
  1312. 1312ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து.
  1313. 1313கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
    காட்டிய சூடினீர் என்று.
  1314. 1314யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
    யாரினும் யாரினும் என்று.
  1315. 1315இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
    கண்நிறை நீர்கொண் டனள்.
  1316. 1316உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
    புல்லாள் புலத்தக் கனள்.
  1317. 1317வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீர் என்று.
  1318. 1318தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
    எம்மை மறைத்திரோ என்று.
  1319. 1319தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
    இந்நீரர் ஆகுதிர் என்று.
  1320. 1320நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
    யாருள்ளி நோக்கினீர் என்று.
  1321. 1321இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
    வல்லது அவர்அள஧க்கு மாறு.
  1322. 1322ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
    வாடினும் பாடு பெறும்.
  1323. 1323புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
    நீரியைந் தன்னார் அகத்து.
  1324. 1324புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
    உள்ளம் உடைக்கும் படை.
  1325. 1325தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
    அகறலின் ஆங்கொன் றுடைத்து.
  1326. 1326உணலினும் உண்டது அறல்இனிது காமம்
    புணர்தலின் ஊடல் இனிது.
  1327. 1327ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
    கூடலிற் காணப் படும்.
  1328. 1328ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலில் தோன்றிய உப்பு.
  1329. 1329ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
    நீடுக மன்னோ இரா.
  1330. 1330ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்.