அதிகாரம் / Chapter 49
திருக்குறள் 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.
பரிமேலழகர்
ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு; பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து. விளக்கம் [உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால், 'பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு' என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.]
English explanation
The men of mighty power their hidden energies repress,As fighting ram recoils to rush on foe with heavier stress
The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt.