அதிகாரம் / Chapter 49

திருக்குறள் 488

செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.

பரிமேலழகர்

செறுநரைக் காணின் சுமக்க - தாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும் அவரைக் கண்டால் பணிக; இறுவரை காணின் தலை கிழக்கு ஆம் - பணியவே, அக்காலம் வந்திறும் வழி அவர் தகைவின்றி இறுவர். விளக்கம் ['பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்க' என்பார், 'சுமக்க' என்றும்; அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக் காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார், 'அவர் தலை கீழாம்' என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும் வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது கூறப்பட்டது.]

English explanation

If foes' detested form they see, with patience let them bear;When fateful hour at last they spy,- the head lies there

If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily b rought low.