அதிகாரம் / Chapter 49

திருக்குறள் 489

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க. இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர்

எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகையை வெல்லக் கருதும் அரசர், தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால்; அந்நிலையே செய்தற்கு அரிய செயல் - அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற் செய்தற்கு அரிய வினைகளைச் செய்க. விளக்கம் [ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும், அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய' என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.]

English explanation

When hardest gain of opportunity at last is won,With promptitude let hardest deed be done

If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).