அதிகாரம் / Chapter 79

திருக்குறள் 781

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நட்புப்போல உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் யாவையுள? அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போலப் பிறர் நல்வினை செய்தற்கு அரியவாகக் காக்கும் காவல்கள் யாவையுள? இது நட்புத் தேடவரிது என்றது.

பரிமேலழகர்

நட்பின் செயற்கு அரிய யா உள: நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - செய்து கொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள? நட்புச் செய்தற்கு ஆவாரைப் பெறுதலும், பெற்றால் செய்யும் உபாயமும், செய்தால் திரிபின்றி நிற்றலும் முதலிய அரிய ஆகலின், 'நட்பிற் செயற்கு அரியன இல்லை' என்றும், செய்தால் பகைவரஞ்சி வினை தொடங்காராகலின், 'அதுபோல வினை வாராமைக்கு அரிய காவல் இல்லை' என்றும் கூறினார். விளக்கம் (நட்புத்தான் இயற்கை செயற்கை என இருவகைப்படும்: அவற்றுள் இயற்கை, பிறப்பு முறையானாயதூஉம், தேய முறையானாயதூஉம் என இரு வகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின், அது 'சுற்றந்தழா'லின் அடங்கிற்று. ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அது துணைவலி என 'வலியறிதலுள்' உதவி பற்றி வருஞ் செயற்கையே யாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது.)

English explanation

What so hard for men to gain as friendship trueWhat so sure defence 'gainst all that foe can do

What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ?