அதிகாரம் / Chapter 79
திருக்குறள் 782
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார்.
பரிமேலழகர்
நீரவர் கேண்மை பிறை நிறை நீர-அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர-மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம். விளக்கம் ('நீரவர்' என்றார், இனிமை பற்றி, கேண்மை, நட்பு என்பன ஒரு பொருட்கிளவி செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவுடையாரும் செய்தன முன் சுருங்கிப் பின் பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன் பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம் தம்முள் முன் அறியாமையும் பின் அறிதலும் ஆம்.)
English explanation
Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon
The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.