அதிகாரம் / Chapter 79

திருக்குறள் 783

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

படிக்குந்தோறும் நூல்நயம்போல அறிவுதரும், பழகுந்தோறும் பண்புடையாளரது நட்பு. இது குணவானோடு நட்புக்கொள்ளின் அறிவுண்டாமென்றது.

பரிமேலழகர்

பண்பு உடையாளர் தொடர்பு பயில்தொறும் - நற்குணமுடைய மக்கள் தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பஞ் செய்தல்; நூல் நவில்தொறும் நயம் போலும்-நூற் பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும். விளக்கம் (நயத்தினைச் செய்தலான் 'நயம்' எனப்பட்டது. இருமையினும் ஒருகாலைக் கொருகால் மிகும் என்பதாகும். இவை இரண்டு பாட்டானும் அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது.)

English explanation

Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;So the heart by use grows fonder, Bound in friendship with the good

Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.