அதிகாரம் / Chapter 89

திருக்குறள் 881

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாத செய்யும் நீர் இன்னாதாகும். அதுபோலச் சுற்றத்தார் நன்மை இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின் அஃது இன்னாதாயே விடும். இது சுற்றமென் றிகழற்க என்றது.

பரிமேலழகர்

நிழல் நீரும் இன்னாத இன்னா ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அது போலத் தழுவவேண்டுவனவாய தமரியல் புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம். விளக்கம் (நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக. இன்னா செயல் - முன் வெளிப்படாமை நின்று துணை பெற்றவழிக் கெடுதல்.)

English explanation

Water and shade, if they unwholesome prove, will bring you painAnd qualities of friends who treacherous act, will be your bane

Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.