அதிகாரம் / Chapter 112

திருக்குறள் 1117

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

குறையிடை நிறைந்த ஒளிர்மதிக்குப்போல இம்மாதர் முகத்துக்கு மறுவுண்டோ?. இது மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்குதற்குக் காரணம் அறிவின்மையாம்; இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதியோடு ஒவ்வாதென்று கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது? அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? விளக்கம் (இடம் - கலை. மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.)

English explanation

In moon, that waxing waning shines, as sports appear,Are any spots discerned in face of maiden here

Could there be spots in the face of this maid like those in the bright full moon ?