அதிகாரம் / Chapter 112
திருக்குறள் 1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மத.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மதியே! நீ இம்மாதர் முகம்போல ஒளிவிட வல்லையாயின் நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி. வாழி- அசை. இது மறுப்போயினதாய முகமென்று கூறப்பட்டது.
பரிமேலழகர்
இதுவும் அது. மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல் ஒளி விடவில்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும்வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி. விளக்கம் ('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்,' என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.)
English explanation
Farewell, O moon! If that thine orb could shineBright as her face, thou shouldst be love of mine
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?