அதிகாரம் / Chapter 129

திருக்குறள் 1286

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.

பரிமேலழகர்

இதுவும் அது. காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன்-காணாத பொழுது அவையேயல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன். விளக்கம் (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்,' என்பதாம்.)

English explanation

When him I see, to all his faults I 'm blind;But when I see him not, nothing but faults I find

When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.