அதிகாரம் / Chapter 129

திருக்குறள் 1287

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்து.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.

பரிமேலழகர்

இதுவும் அது.- உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல் - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? . புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? விளக்கம் ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் . புரைபடுதல். 'புலந்தாலும் பயனில்லை' என்பதாம். 'பொய்த்தல் அறிந்தென்' என்பது படாமையின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் போல முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன்; இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.)

English explanation

As those of rescue sure, who plunge into the stream,So did I anger feign, though it must falsehood seem

Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?