அதிகாரம் / Chapter 129
திருக்குறள் 1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்பழிகாணேன் கண்ட இடத்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப் போலக் கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன். இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக்கூறிய குற்றமெல்லாம் யாண்டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத்தெல்லாம் கண்டிருந்து, அவனைக் கண்ட விடத்துக் காணமாட்டேன். விளக்கம் (கோல்; ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின், மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.)
English explanation
The eye sees not the rod that paints it; nor can ISee any fault, when I behold my husband nigh
Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.