அதிகாரம் / Chapter 129
திருக்குறள் 1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றது என் னெஞ்சு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு. இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. தோழி - தோழீ! ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர்செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. விளக்கம் (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன் என் என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.)
English explanation
My friend, I went prepared to show a cool disdain;My heart, forgetting all, could not its love restrain
O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.