அதிகாரம் / Chapter 129

திருக்குறள் 1283

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.

பரிமேலழகர்

இதுவும் அது. பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்கனைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. விளக்கம் (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை?' என்பதாம்.)

English explanation

Although his will his only law, he lightly value me,My heart knows no repose unless my lord I see

Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.