அதிகாரம் / Chapter 3
திருக்குறள் 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.
பரிமேலழகர்
நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் - நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். விளக்கம் ('நிறைமொழி' என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி. காட்டுதல்: பயனான் உணர்த்துதல்.)
English explanation
The might of men whose word is never vain,The 'secret word' shall to the earth proclaim
The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.