அதிகாரம் / Chapter 97

திருக்குறள் 970

இளிவரின் வாழாத மானம் உடையார்ஒளிதொழுது ஏத்தும் உலகு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இளிவரவு உண்டானால் உயிர் வாழாத மானமுடையாரது புகழைத் தொழுது துதிக்கும் உலகு.

பரிமேலழகர்

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கு இழிவு வந்துழிப் பொறுத்து உயிர் வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ் வடிவினை; தொழுது ஏத்தும் உலகு எஞ்ஞான்றும் தொழுது துதியாநிற்பர் உலகத்தார். "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவாவானவூர்தி - எய்துவர்," விளக்கம் (புறநா. 27) ஆகலின், துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று. இவை நான்கு பாட்டானும் மானப் பொருட்டாய இறப்பினது சிறப்புக் கூறப்பட்டது.)

English explanation

Who, when dishonour comes, refuse to live, their honoured memoryWill live in worship and applause of all the world for aye

The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.