அதிகாரம் / Chapter 103

திருக்குறள் 1027

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன்கண்ணர்மாட்டே உளதானாற்போல, ஒருகுடியிற் பிறந்தார் பலருளராயினும் குடியோம்பல் வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்.

பரிமேலழகர்

அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர்மேலதானாற் போல; தமரகத்தும் பொரை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பவராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம். விளக்கம் (பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.)

English explanation

The fearless hero bears the brunt amid the warrior throng;Amid his kindred so the burthen rests upon the strong

Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.