அதிகாரம் / Chapter 21
திருக்குறள் 205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றும் பெயர்த்து.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது. இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.
பரிமேலழகர்
இலன் என்று தீயவை செய்யற்க-'யான் வறியன்' என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். விளக்கம் (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். 'அன்' விகுதி முன் தனித்தன்மையினும், பின் படர்க்கை யொருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித் குறிஞ்சி. 22) என்பதனானும் அறிக. மற்று-அசைநிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். 'பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க; செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளானும் வறியனாம்,' என்று உரைப்பாரும் உளர்.)
English explanation
Make not thy poverty a plea for ill;Thy evil deeds will make thee poorer still
Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still.