அதிகாரம் / Chapter 21
திருக்குறள் 206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக. இது நோயுண்டாமென்றது.
பரிமேலழகர்
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்-துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன்; தீப்பால தான் பிறர்கண் செய்யற்க - தீமைக் கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. விளக்கம் (செய்யின், அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)
English explanation
What ranks as evil spare to do, if thou would'st shunAffliction sore through ill to thee by others done
Let him not do evil to others who desires not that sorrows should pursue him.