அதிகாரம் / Chapter 21

திருக்குறள் 204

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.

பரிமேலழகர்

பிறன் கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். விளக்கம் ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதே தானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.)

English explanation

Though good thy soul forget, plot not thy neighbour's fall,Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall

Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.