அதிகாரம் / Chapter 21

திருக்குறள் 203

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை. இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.

பரிமேலழகர்

அறிவினுள் எல்லாம் தலை என்ப-தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர்; செறுவார்க்கும் தீய செய்யா விடல்-தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. விளக்கம் (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும், செய்யத் தக்குழியுஞ் செய்யாது ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். 'செய்யாது' என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.)

English explanation

Even to those that hate make no return of ill;So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil

To do no evil to enemies will be called the chief of all virtues.