அதிகாரம் / Chapter 86

திருக்குறள் 851

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பார஧க்கும் நோய்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர். இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.

பரிமேலழகர்

எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை, பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர். விளக்கம் (மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லா உயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்று விளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும் கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று. இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.)

English explanation

Hostility disunion's plague will bring,That evil quality, to every living thing

The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.