அதிகாரம் / Chapter 38
திருக்குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.
பரிமேலழகர்
கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும்; வகுத்தான் வகுத்த வகையல்லா துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான அல்லது நுகர்தல் உண்டாகாது. விளக்கம் (ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின் 'வகுத்தான்' என்றார். "இசைத்தலும் உரிய வேறிடத்தான்" (தொல். சொல். 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையாதார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், 'உம்மை' எச்ச உம்மை. வெறு முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.)
English explanation
Save as the 'sharer' shares to each in due degree,To those who millions store enjoyment scarce can be
Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).