அதிகாரம் / Chapter 46

திருக்குறள் 456

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை. இது மேலதற்குப் பயன் கூறிற்று.

பரிமேலழகர்

மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் . மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும்; இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை. விளக்கம் (காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம், நன்று ஆகும்' என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.)

English explanation

From true pure-minded men a virtuous race proceeds;To men of pure companionship belong no evil deeds

To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.