அதிகாரம் / Chapter 18

திருக்குறள் 173

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.

பரிமேலழகர்

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார்-பிறர்பால் வெளவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர்-அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தைக் காதலிப்பவர். விளக்கம் ('பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.)

English explanation

No deeds of ill, misled by base desire,Do they, whose souls to other joys aspire

Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)