அதிகாரம் / Chapter 18
திருக்குறள் 174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார். இது தெளிவுடையார் செய்யா ரென்றது.
பரிமேலழகர்
இலம் என்று வெஃகுதல் செய்யார்-'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். விளக்கம் (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்லவிடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.)
English explanation
Men who have conquered sense, with sight from sordid vision freed,Desire not other's goods, e'en in the hour of sorest need
The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute."