அதிகாரம் / Chapter 18

திருக்குறள் 175

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.

பரிமேலழகர்

அஃகி அகன்ற அறிவு என்னாம்-நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகி யார் மாட்டும் வெறிய செயின்-பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். விளக்கம் ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது, தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவம், கடியனவும் முதலியன் செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.

English explanation

What gain, though lore refined of amplest reach he learn,His acts towards all mankind if covetous desire to folly turn

What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?