அதிகாரம் / Chapter 18

திருக்குறள் 172

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்நடுவன்மை நாணு பவர்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர். இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.

பரிமேலழகர்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்-பிறர் பொருளை வெளவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வெளவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர்-நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். விளக்கம் ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.)

English explanation

Through lust of gain, no deeds that retribution bring,Do they, who shrink with shame from every unjust thing

Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.