அதிகாரம் / Chapter 18

திருக்குறள் 171

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்றது.

பரிமேலழகர்

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின், குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்-அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச் செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். விளக்கம் (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார், 'நன்பொருள் வெஃகின்' என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.)

English explanation

With soul unjust to covet others' well-earned store,Brings ruin to the home, to evil opes the door

If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.