அதிகாரம் / Chapter 17
திருக்குறள் 170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.
பரிமேலழகர்
அழுக்கற்று அகன்றாரும் இல்லை-அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. விளக்கம் (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது.)
English explanation
No envious men to large and full felicity attain;No men from envy free have failed a sure increase to gain
Never have the envious become great; never have those who are free from envy been without greatness.