அதிகாரம் / Chapter 17
திருக்குறள் 169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்.
பரிமேலழகர்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-கோட்டத்தினைப் பொருந்திய தனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்-ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும். விளக்கம் (கோட்டாம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின், என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின், 'நினைக்கப்படும்' என்றார். ''இம்மைச் செய்தன யான்அறி நல்வினை; உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது' (சிலப்.15:91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.)
English explanation
To men of envious heart, when comes increase of joy,Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.