அதிகாரம் / Chapter 17
திருக்குறள் 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.
பரிமேலழகர்
அழுக்காறு என ஒரு பாவி-அழுக்காறு என்று சொல்லபட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்-தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து, மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும். விளக்கம் (பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங் கெடுத்தாற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.
English explanation
Envy, embodied ill, incomparable bane,Good fortune slays, and soul consigns to fiery pain
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)