அதிகாரம் / Chapter 17

திருக்குறள் 167

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

பரிமேலழகர்

அழுக்காறு உடையானை-பிறர் ஆக்கம் கண்வழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும்-திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்கு காட்டி நீங்கும். விளக்கம் (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது' அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி. மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கோடுவித்து அழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.)

English explanation

From envious man good fortune's goddess turns away,Grudging him good, and points him out misfortune's prey

Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.