அதிகாரம் / Chapter 113
திருக்குறள் 1125
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
மறந்தேனாயின் நினைப்பேன் யான்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை. தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.
பரிமேலழகர்
ஒருவழித் தணந்துவந்த தலைமகன், 'நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ?' என்ற தோழிக்குச் சொல்லியது. ஒள் அமர்க்கண்ணாள் குணம்; யான் மறப்பினை உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன். விளக்கம் (மன்: ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று; மேல் தலைமகள் கூற்று.)
English explanation
I might recall, if I could once forget; but from my heartHer charms fade not, whose eyes gleam like the warrior's dart
If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).