அதிகாரம் / Chapter 127
திருக்குறள் 1267
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்கண்அன்ன கேளிர் விரன்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கண்போற் சிறந்தகேளிர் வருவாராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக் கடவேனோ: அன்றி என்னாற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ: அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக் கடவேனோ: யாதுசெய்யக் கடவேன்?.
பரிமேலழகர்
இதுவும் அது. கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின்; புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ? புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ? கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்? விளக்கம் (புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ? என்று உரைப்பாரும் உளர்.)
English explanation
Shall I draw back, or yield myself, or shall both mingled be,When he returns, my spouse, dear as these eyes to me
On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?