அதிகாரம் / Chapter 127
திருக்குறள் 1266
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன். இது வரவு வேட்கையாற் கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. கொண்கண் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன். விளக்கம் ('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.)
English explanation
O let my spouse but come again to me one day!I'll drink that nectar: wasting grief shall flee away
May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.