அதிகாரம் / Chapter 127
திருக்குறள் 1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்கும்என் மென்தோள் பசப்பு.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும். இது காண்டல் வேட்கையால் கூறியது.
பரிமேலழகர்
தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை,' என்ற தோழிக்குச் சொல்லியது. கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின் கண்பசப்புத் தானே நீங்கும். விளக்கம் ('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அது வேண்டும் எனப்துபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.)
English explanation
O let me see my spouse again and sate these longing eyes!That instant from my wasted frame all pallor flies
May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.