அதிகாரம் / Chapter 127

திருக்குறள் 1264

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்கோடுகொ டேறுமென் நெஞ்சு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

கூடுதற்கு அரிய காமத்தைக் கூடப் பெற்றுப்பிரிந்தவர் வருவாராக நினைந்தே என்னெஞ்சம் மரத்தின்மேலேறிப் பாராநின்றது. உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் சேய்த்தாக வருவாரைக் காணலாமென்று நினைத்து அதனை ஏறிற்றாகக் கூறினாள்.

பரிமேலழகர்

இதுவும் அது. பிரிந்தார் கூடிய காமம் வரவு உள்ளி - நீங்கிய காமத்தராய் நம்மைப் பிரிந்து போயவர் மேற்கூறிய காமத்துடனே நம்கண் வருதலை நினைந்து; என் நெஞ்சு கோடு கோடு ஏறும் - என் நெஞ்சு வருத்தமொழிந்து மேன்மேற் பணைத்தெழாநின்றது. விளக்கம் (வினைவயிற் பிரிவுழிக் காமஇன்பம் நோக்காமையும்,? அது முடிந்துழி அதுவே நோக்கலும் தலைமகற்கு இயல்பாகலின், 'கூடிய காமமொடு' என்றாள். 'ஓடு' உருபு விகாரத்தால் தொக்கது. கோடு கொண்டேறலாகிய மரத்தது தொழில் நெஞ்சின்மேல் ஏற்றப்பட்டது. 'கொண்டு' என்பது குறைந்து நிற்து. 'அஃதுள்ளிற்றலேனாயின் இறந்து படுவல்,' என்பதாம்.)

English explanation

'He comes again, who left my side, and I shall taste love's joy,'-My heart with rapture swells, when thoughts like these my mind employ

My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.