அதிகாரம் / Chapter 127

திருக்குறள் 1263

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

இன்பத்தை நச்சாது வலிமையையே நச்சிப் பேசுகின்ற மனமே துணையாகச் சென்றவர் வருவாரென்கின்ற ஆசைப்பாட்டினால் இன்னும் உளேனானேன். இஃது அவர் வாராரென்று கூறியது.

பரிமேலழகர்

இதுவும் அது. உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம் ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ் வெல்லையினும் உளேனாயினேன். விளக்கம் ('உரன்' என்பது ஆகுபெயர். 'அந் நசையான் உயிர் வாழா நின்றேன்; அஃதில்லையாயின் இறந்துபடுவல்,' என்பதாம்.)

English explanation

On victory intent, His mind sole company he went;And I yet life sustain And long to see his face again

I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.