அதிகாரம் / Chapter 5
திருக்குறள் 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.
பரிமேலழகர்
இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான்-இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் கலை-புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். விளக்கம் (முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பலவகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்தலின், 'தலை' எனவும் கூறினார்.)
English explanation
In nature's way who spends his calm domestic days,'Mid all that strive for virtue's crown hath foremost place
Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.