அதிகாரம் / Chapter 5
திருக்குறள் 46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ தெவன்?
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?. மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார்.
பரிமேலழகர்
இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின்-ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்-அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? விளக்கம் (அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், 'போஒய்ப் பெறுவது எவன்' என்றார்.)
English explanation
If man in active household life a virtuous soul retain,What fruit from other modes of virtue can he gain
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?