அதிகாரம் / Chapter 55

திருக்குறள் 544

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு. இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.

பரிமேலழகர்

குடிதழீஇக் கோல் ஒச்சும் மாநில மன்னன் அடி- தன் குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை; தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார். விளக்கம் [அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும், அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.]

English explanation

Whose heart embraces subjects all, lord over mighty landWho rules, the world his feet embracing stands

The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.