அதிகாரம் / Chapter 55

திருக்குறள் 545

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

மழைபெய்தலும் விளைதலுங்கூடி, நூல் சொன்ன இயல்பினானே முறையை நடத்த வல்ல அரசனது நாட்டகத்தினவாம் என்றவாறு. இது மேற்கூறிய முறைமை செய்ய மழையும் விளைவும் உண்டாம் என்றது.

பரிமேலழகர்

பெயலும் விளையுளும் தொக்கு-பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி; இயல்புளிக் கோல் ஒச்சும் மன்னவன் நாட்ட-நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம். விளக்கம் ['உளி' என்பது மூன்றவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.]

English explanation

Where king, who righteous laws regards, the sceptre wields,There fall the showers, there rich abundance crowns the fields

Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.