அதிகாரம் / Chapter 55

திருக்குறள் 546

வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின். இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.

பரிமேலழகர்

மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின் கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல்; அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின், விளக்கம் [கோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார்; ''மாண்ட. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்'' (புறநா 55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க.]

English explanation

Not lance gives kings the victory,But sceptre swayed with equity

It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.