அதிகாரம் / Chapter 55

திருக்குறள் 547

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும்; அவ்வரசனை அவன்றான் செய்யும் முறை காக்கும். அதனைத் தப்பாமல் செய்யின் என்றவாறு. இது தனக்குக் காவலாம் என்றது.

பரிமேலழகர்

வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்; அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும்; முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின். விளக்கம் [முட்டாமல் செலுத்தியவாறு; மகனை முறை செய்தான் கண்ணும் (சிலப். 20;53 - 55), தன்கை குறைத்தான் கண்ணும் (சிலப். 23: 42 - 53) காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.]

English explanation

The king all the whole realm of earth protects;And justice guards the king who right respects

The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.