அதிகாரம் / Chapter 55

திருக்குறள் 543

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல்.

திருவள்ளுவர் · Thiruvalluvar

Illustration of Thiruvalluvar holding a palm-leaf manuscript and stylus
திருவள்ளுவர்

தமிழ் உரைகள்

மணக்குடவர்

அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

பரிமேலழகர்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது; மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல். விளக்கம் [அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி 'அந்தணர் நூல்' என்றார். ''மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்'' (மணி. 22: 208, 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் - அநாதியாயினும், செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.]

English explanation

Learning and virtue of the sages spring,From all-controlling sceptre of the king

The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.