அதிகாரம் / Chapter 132
திருக்குறள் 1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள்.
பரிமேலழகர்
இதுவும் அது. யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, 'அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர்' என்று சொல்லிப் புலந்தாள். விளக்கம் (தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்பை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை,' என்பதாம்.)
English explanation
'I love you more than all beside,' 'T was thus I gently spoke;'What all, what all?' she instant cried; And all her anger woke
When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky.