அதிகாரம் / Chapter 132
திருக்குறள் 1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
இப்பிறப்பிலே யாம் பிரியோமென்று சொன்னேனாக, அதனால் மறுபிறப்பின்கண் பிரிவுண்டென்று கருதிக் கண்ணிறைய நீர் கொண்டாள்.
பரிமேலழகர்
இதுவும் அது. இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேன் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள். அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள். விளக்கம் ('வௌ¢ப்படு சொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை,' என்பதாம்.)
English explanation
'While here I live, I leave you not,' I said to calm her fearsShe cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears
When I said I would never part from her in this life her eyes were filled with tears.