அதிகாரம் / Chapter 132
திருக்குறள் 1316
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.
திருவள்ளுவர் · Thiruvalluvar

தமிழ் உரைகள்
மணக்குடவர்
அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்: மறந்தாரன்றே நினைப்பார். ஆதலான் எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங்காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள். இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.
பரிமேலழகர்
இதுவும் அது. உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், 'யான் உள்ளினேன்' என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள்-என, அதனை ஒருகால் மறந்துபின் நினைந்தேன் என்றதாகக் கருதி, 'என்னை யிடையே மறந்தீர்' என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள். மற்று - வினை மாற்றிக்கண் வந்தது. அருத்தாபத்தி வகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.
English explanation
'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,'She cried, and then her opened arms, Forthwith embraced me not
When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.